Tuesday, October 5, 2010

உன் இதயம் ..


எல்லாவற்றிற்கும் மேலாக
வெல்ல முடியாத உன் இதயம் ..
எப்போதும் வெற்றிடமாய் நான்...

Monday, September 20, 2010

உனக்காக....


வந்து பார்த்து விட்டு போ...
காதலில் விழுந்த காரணத்தால்,
எதனை காயங்கள் ,
எதனை இளப்புகள் ,
உனக்காக வாழ்ந்ததில் ,
காணமல் போன என் வாழ்க்கையை ,
பார்த்து விட்டு போ.... .!!!!!

என் காதலி...


முள் இல்லாத ரோஜாவால் தூவுங்கள்
என் மரண ஊர்வலத்தில்...
வந்தாலும் வருவாள் "என் காதலி"
பாவம் அவளின் பாதங்கள்...!!!

Saturday, September 18, 2010

Best love song : FEELINGS


FEELINGS....

காதலை எப்போது ஏற்பாய்


விழியில் வழிந்த கண்ணீரை
விரலால் துடைத்த நீ
என் உயிரில் எழுந்த
காதலை
எப்போது ஏற்பாய்...!?!

உறங்கவில்லை இதயம்...


பேச வேண்டிய இதழ்கள்
பேசிக்கொள்ளவில்லை..
பேசிக்கொண்டன விழிகள்
மூடிக்கொண்டது இமை..
திறந்தது மனம்..
உறங்கவில்லை இதயம்...!!!!

The most painfull.....


The most painfull thing in life is to sit beside a person you love and know the fact dat the person can never be yours in this life time...!!!

LOVE....


You Taught Me
How to Love,
How to Laugh,
How to Cry,
But WheN U Left,
You Forgot To Teach Me How To Forget You.....!!!

உனக்கே தெரியாமல்....


உனக்கே தெரியாமல் நான்
உன்னை காதலித்ததிலும்
நீ என்னை காதலிப்பதாக
நினைத்துக் கொள்வதிலும்
உள்ள சுகம்
அவன் அவனுக்கு மட்டும் தெரியும்....!!!

காதல் கடிதம்....


உனக்காக நான்
எழுதும் காதல் கடிதம் கூட
என்னை பார்த்து சிரிக்கிறது..
இதையாவது அவளிடம்
கொடுப்பாயா என்று..!!!

இதயம்....


உன்னை என் இதயம் என்று சொல்ல மாட்டேன்
ஏனென்றால் உன்னை துடிக்க விட்டு
நான் உயிர் வாழ பிடிக்கவில்லை..!!!

மௌனம்,....


ஒரு துளி ரத்தம் கூட சிந்தவில்லை
ஆனாலும் வலிக்கின்றது
மனதுக்கு பிடித்தவர்களின்
மௌனம்..!!

தொலைவில்....


நான் விரும்பிய அனைத்தும்
தொலைவில் தான் உள்ளது
அன்று நிலவு
இன்று நீ....!!!

உன்னை மறப்பத ?


அன்பே !
என்னை மறந்து விடு! என்றாய் !
முயற்சி செய்தேன்.... ஆனால்
என்னால் முடிய வில்லை !

உன்னை என் மனத்திலிருந்து
வெளியேற்ற நினைத்தேன் - ஆனால்
கண்ணீரைத்தான் என்னால்
வெளியேற்ற முடிந்தது !

உன்னை மறப்பதும்
உயிரை துறப்பதும்
ஒன்றாக தெரிகிறது !

Sunday, July 18, 2010

மறந்து விடு


அவள் என்னை
மறந்து விடு என்றாள்....
அவள் என்னை மறக்காமல்
மறந்து விட்டதாக கூறி.....
நான்
அவளை மறக்க நினைக்கும்
போதெல்லாம் .....
அவள் நினைவுகள்
தினம் என்னை கொள்கிறது.....
இந்த வேதனைக்கு
நான் இறந்து விடுவேன்........
அவளுக்காக......

திரும்ப தர முடியுமா உன்னால்?


வான் நிலா
வானின் கண்ணீர்
புல்வெளி
பூங்காவனம்
இப்படி அனைத்தயும் ரசித்த
என் மென்மையான மனதை !

கடிகாரத்தையும்
கையில் இருக்கும் செல் போனையும்
மாறி மாறி பார்த்திருந்த
அந்த கணத்தை !

ஈமெயிலில் refresh button தட்டியும்
chat messenger லில் உன் பெயர் பார்த்தும்
காத்திருந்த அந்த நிமிடங்களை !

துக்கமின்றி துள்ளி குதித்தோடிய
என் குழந்தை உள்ளத்தை !

பெற்றோர் என் மேல்
இழந்த நம்பிக்கையை !

உன் உறவுக்காக
நான் தொலைத்த சொந்தங்களை !

உன்னை நினைத்து
உனக்காக வாழ்ந்த
ஒவ்வொரு வினாடியை !

உயர்ந்த இலட்சியங்களுடனும்
பலவித கனவுகளுடனும்
வாழ்ந்து வந்த
தன்னம்பிக்கையை !

இழந்துவிட்ட என் இறந்தகாலத்தை
மறந்துவிட்ட என் எதிர்காலத்தை
தொலைத்துவிட்ட என் சுயத்தை

திரும்ப தர முடியுமா உன்னால்?

தோல்விக்கு பின்


காதல் தோல்விக்கு பின்
தனிமையில் நடந்தேன்-
தொடர்ந்து வந்தது நிழல் என்று நினைத்தேன்
இல்லை அவளின் நினைவுகள்!

தனிமை...


நான் என்னை மறக்கும்
தனிமையில்...
உந்தன் நினைவுகள் என்னில்
அலைமோதும்!

Tuesday, July 13, 2010

வலித்துக் கொண்டேயிருக்கிறாய்!!!


விழியில் விழுந்தாய்!
என் இதயம் நுழைந்தாய்!
உயிரிலும் கலந்தாய்!
எனை ஏன்! பிரிந்தாய்?

உன் மேல்
நான் கொண்ட பிரியாத
அன்பை புரியாமலே
பிரிந்து சென்றாய்

நம் நினைவுகளை
தண்ணீரில்
எழுதி சென்றாய்
எனை கண்ணீரில்
மிதக்க வைத்தாய்!

என் உயிரில்
வாழ்ந்துவிட்டு
என் உலகையே இருட்டாக்கி
சென்று விட்டாய்!

ஒரே வினாடியில்
என் உயிரின்
அனைத்து துடிப்பையும்
செயலிழக்க செய்தாய்!

உன் பிரிவை மறக்க
முயல்கிறேன்
முடியவில்லை!

உன் பிரிவை மறக்க
நினைக்கும்தோறும்

இதயத்தில் இறங்கிய
முள்ளாய் என்னுள்
வலித்துக் கொண்டேயிருக்கிறாய்!!!

Thursday, June 10, 2010

வாழக்காத்திருக்கும்..


உன் ஓர் வார்த்தையில்
வாழக்காத்திருக்கும்
எனக்காக ஏன் நீ
வாழவே மாட்டேன் என்கிறாய்
என்னுடன்...

இதய ஒலிகள்


பறிக்கின்ற போது
மரிக்கின்ற மலர்கள்
தெளிக்கின்ற கண்ணீர்
உணர்வதில்லையாம்
ஒருவருமே
...அது போல் - உன்
வெறுக்கின்ற பார்வையில்
வெடிக்கின்ற - என்
இதய ஒலிகள்
அறியமாட்டாயா?
நீ!

Friday, June 4, 2010

என் இதயத்தின் வலி


பிரிந்து விட்டதால் முடிந்து விட்டது என்று நினைத்து விட்டாள்
அவளுக்கு எங்கே தெரிய போகிறது "என் இதயத்தின் வலி"
துடிக்கும் போதல்லாம் கேக்கிறது என் இதயம் "இனி உன்னால் நிம்மதியாக வாழ முடியுமா என்று"

Tuesday, June 1, 2010

மறந்து விடாதே...


என்னை
மறக்க
வேண்டும்
என்று நினைக்கும்
ஒவ்வொரு நிமிடங்கள் ’இலும் ,
என்னை நினைக்கிறாய்
என்பதை மறந்து விடாதே …

மறக்க வேண்டும்,....


தோல்வி எனக்கு புதிதல்ல
அதனாலதான் அவளை
மறக்க வேண்டும்
என்று நினைக்கும் போது கூட
என் மனதோடு போராடி தோற்று போகிறேன்..

கண்முன்னே.....


உன்னை மறக்க நினைக்கிறேன்,
நம் காதல் நம் கண்முன்னே வருகிறது
நம் காதலை மறக்க நினைக்கிறேன்,
உன் முகம் என் கண்முன்னே வருகிறது
இரண்டையும் மறக்க நினைக்கிறேன்,
மரணம் கண்முன்னே வருகிறது..

Monday, May 31, 2010

காதலே மலர்


இன்றைக்கு பூத்த மலரை போல்
நீ இருக்க
அந்த அழகை ரசிக்கும் கவிஞனாக
நான் இருபேன்
உன்னை போல் ஒரு மலரை
பார்ததினால்
இன்று நான் பித்தனகிறேன்
உன் வாசம் என்னை ஈர்த்தால்
அதை உனக்கே கவிதையாக
சமர்பிக்கிறேன்
பூத்த மலரே உன்னை ரசிக்கும்
கவிஞனுக்கு நீ உன்னையே
தர விரும்பிகிறேன்

Thursday, May 27, 2010

நம்காதல்

உனக்கு பிடித்த நானும்,
எனக்கு பிடித்த நீயும்,
நமக்கு பிடித்த நம் காதலும்,
யாரிற்கும் பிடிக்காததால்,
உன்னை பிரிந்து நானும்,
என்னை பிரிந்து நீயும்,
நம்மை பிரிந்து நம்காதலும் தவிக்கிறது..

Tuesday, May 18, 2010

என் காதல்…

என் காதல்…
‘ஒரு’ தலையாகவே …
இருந்துவிடட்டும்
அதனால்தான்
இன்னும் சொல்லவில்லை
என் காதலை.

நீ சம்மதம்
சொல்லிவிட்டால்
‘இரு’ தலைக் காதலாம்
எல்லோரும்
சொல்கிறார்கள்;

வார்த்தையில்கூட
நாம் இருவரென்ற
பிரிவெதற்கு…

‘ஒரு’ என்ற வார்த்தைக்குள்
ஒன்றாகவே
இருந்திடுவோம்.
இனியும் சொல்லப்போவதில்லை
என் காதலை…

‘ஒரு’ தலையாகவே
இருந்துவிடட்டும்…

காதலுக்காக.........

ஒரு செங்கல் கூட
கைவசம் இல்லை.
கட்டிடம் கட்டும்
உத்தேசமும் இல்லை..
ஒரு கவிதை கூட
எழுதத் தெரியவில்லை..
வார்த்தைகள் கைக்கு அகப்படாமல்
கண்ணாமூச்சி ஆடுகின்றன..
இதயம் துடிப்பது கூட
அதன் போக்கில்தான்..
எதற்காகவும் தவித்து
பழக்கம் இல்லை..
ஆனாலும் பெண்ணே..
உன்னைச் சந்தித்த பின்தான்
இதையெல்லாம் யோசித்தேன்..
முன்னாள் காதலர்களின்
அவஸ்தை பற்றி..
மகால்கள் பற்றி..
காவியங்கள் பற்றி..
எதுவுமே கற்றறியாமல்
காலங்கழித்த என் அறியாமை
இப்போதுதான் உறுத்துகிறது..
அவர்களை எல்லாம்
சகாப்தமாக்கி விட்டு
என்னை மட்டும்
சூனியமாக்கி விட்ட
பேரன்பே..
இன்னொரு பிறவி தா..
எனக்கு மட்டும்..
சரித்திரத்தில் நிலைக்க
ஒரு சாகசத்துடன்!

தொலைத்த பின்னும் நிம்மதி..!

யாரேனும் தனக்குரிய
பொருளைத் தொலைத்து விட்டால்
நிம்மதியாய் உறங்குவார்களா..?
ஆனால் நான் உறங்குகிறேன்..!
என் மனதை தொலைத்து
விட்ட பின்பும்
நிம்மதியாய் உறங்குகிறேன்..!
ஏனெனில்…
என் மனதை
உன்னிடம்தான் - அதுவும்
உரியவளிடம்தான்
தொலைத்திருக்கிறேன்
என் மன நிம்மதியோடு..!

காதல்...........

உணர்ந்தவர்கள் மட்டுமே
உரை எழுத முடிகின்ற
உன்னதமான உணர்வு
கண்களால் விதையெடுத்து
இதயத்தில் நடப்படும்
ஒரு மலர்ச்செடி
காற்றுப் புகாத
கண்டங்களிலும்
கண்டிப்பாய் நுழைந்திருக்கும்
ஒன்றுக்குள் ஒன்றாய்
உருகுவதே இதன் குணம்
சோகமே பிடித்தமான “ரசம்”
காவியங்கள்
பல கொடுத்தாலும்
கர்வமில்லாதது…
இது
சில பேரால் தூற்றப்படும்!
சில பேரால் போற்றப்படும்!
சில பேரைப் பைத்தியமாக்கும்!
சில பேரை ஞானியாக்கும்! – ஆனால்
அனைவரையும் கவிஞனாக்கும்!!!!

இடற்கல்...

உன்
கால் கல்லில் இடற
பதறிப் போனேன்,
நீ போன பின்பு
கல்லைப் பெயர்த்து
கவனமாய் பாதுகாத்தேன்,
என்னை இடறிய உன்னை
இடறிய கல்லல்லவா அது!

என்னோடு நீ செய்த பயணம்..!


நேற்றைய பொழுது
என்னோடு நீ செய்த பயணம்...
என்னுள் இன்பத்தை
மட்டுமன்று பெண்ணே..!
என் இதயத்துள்
இனிப்பையும் ஊட்டியது..!
நீ என்னோடு
பேசிக் களித்த நிமிடங்களும்...
சீண்டி விளையாடிய தருணங்களும்...
செல்லமாய் அடித்த நிகழ்வுகளும்...
என்னோடு கைகோர்த்து
நடந்த நடையழகும்...
என் கையில் கல்வெட்டாய்
உன் காதலை பதிவுசெய்த
எழுத்தழகும்...
எனை முழுவதுமாய்
ஆட் கொண்டு விட்டன..!
அன்பிற்கினியவளே...
மீண்டுமொரு அதே
நாளிற்காக ஏங்குகிறேன்..!
தேங்குகிறேன்...!
உன்னிடம் மன்றாடுகிறேன்..!
வா என்னோடு...
மீண்டுமொரு வசந்தகால பயணத்திற்கு..!

உலகின் அதிசய விமானங்கள்..

இப்படிப்பட்ட விமானங்களும் இருக்கின்றனவா என்று இந்தப் படங்களைப் பார்த்தும் ஆச்சரியப் பட்டுப் போனேன்.. நீங்களும் தான் கொஞ்சம் பாருங்களேன்..

நிச்சயமா தெரியும் விமான நிலையங்களிலோ,அல்லது வானத்திலோ இந்த விமானங்களை நீங்கள் கண்டிருக்கவே முடியாது..

ஏனென்றால்..
எல்லாப் படங்களையும் பார்த்திட்டு கீழே வாசிக்கவும்..












ஏனென்றால் இவை எல்லாமே செய்யப் பட்டது பொறியியலாளர்களால் அல்ல,.. கிராபிக்ஸ் வல்லுனர்களால்.. ஹீ ஹீ.. பொழுது போகல.. பதிவு எழுதவும் உடல் நிலை கை கொடுக்கல.. அதுதான்.. இப்படி சும்மா :)

போரொடுங்கும் புகழொடுங்காது!

2001ஆம் ஆண்டு ஏப்ரில் மாதம் கொழும்பில் இடமெற்ற கம்பன் விழாக் கவியரங்கில் என்ற தலைப்பில் நான் படித்த கவிதை..

கவியரங்கத் தலைமை கவிக்கோ அப்துல் ரகுமான்.

ஓரளவு (!) நன்றாக எனது கவிதை இருந்ததாக சொல்லப் பாத்தாலும்,இதன் பின்னர் எனக்கு கம்பன் விழாக்களில் கவி பாட அழைப்புக்கள் வரவில்லை.. (அரசியலில் எனது வரிகள் கொஞ்சம் அதிகமாகவே விளையாடியதும் ஒரு காரணம் எனப் பின்னர் அறிந்தேன்) எனினும் சொல்லரங்கம் போன்ற சில நிகழ்வுகளில் இணைந்து கொண்டேன்..

இங்கே நான் ராமன் என்று யாரை நினைத்துக் கவி வடித்தேன் என்று இலங்கை,ஈழம் பற்றி அறிந்தோருக்கு நன்றாகவே புரியும் என்று நம்புகிறேன்..அது புரிந்தால் ஏனைய விஷயங்கள் புரிவதில் சிக்கல் இருக்காது! (ராமன் காடாண்டவன் என்பது எல்லோருக்கும் தெரியுமே!

என் கவிதை முடிய, கவிக்கோ "அன்று ராமனுக்கு ஒரு அனுமான் தூதன்; இன்று இவர் சொன்ன ராமனுக்கு யாருமில்லை எஜமான்; எனவே இந்தப் பெருமான் (என்னையே தாங்க) இந்த ரகுமான் மூலமாக பாரதத்துக்கு தூது விட்டுள்ளார்" என்று கை தட்டல் வாங்கிக் கொண்டார்.

அண்மைக் காலத்தில் (2007,2008) அழைத்தாலும் ஏதாவது காரணம் சொல்லி கம்பவாரிதி அவர்களிடம் இருந்து எஸ்கேப் ஆகி விடுகிறேன்.. (என் வாயும் எழுத்தும் சும்மா இருக்காது.. கம்ப ராமாயணம் பற்றி பாட சொன்னாலும் நான் கந்தலாகிப் போன எம்மக்கள் நிலை பற்றித் தான் தொடர்பு படுததுவேன்..ஏன்யா வம்பு? அவருக்கும் சரி.. எனக்கும் சரி.. )


போரொடுங்கும் புகழொடுங்காது!

கவிபாடும் எண்மரில் முதல்வன் யான்!
வரிசையில்,இருக்கையில்
வயதினில் இளையவன்!
வாக்கிலும் இளையவன்!
அரங்கிற்குப் புதியவன்!
அதனால் சிறியவன்!
வார்த்தைகளை வளைத்து
கவி வடிப்பதிலும் இளையவனேயாயினும்
சளைத்தவனல்ல எனக்காட்ட
இக்கம்பன் கவியரங்கு
காட்டவேண்டும் வழி!
கவியரங்கிற்குக் களையூட்ட
எம்மைக் களிப்பூட்டக் காத்திருக்கும்
சக கவித்தோழருக்கு சமர்ப்பித்தேன் என தோழமை வணக்கத்தினை

அரங்கில் அடியேனையேற்றி
வலிந்தழைத்து வாய்ப்பளித்த
ஐயா கம்பவாரிதிக்குக்
கனிவான நன்றிகள்
இக்காற்றலையில் கற்றறியும் கற்றுக்குட்டிக் கவியிடமிருந்து!

கம்பன் புகழ் மேவி
கன்னித் தமிழ் பருக வந்துற்ற சபையவரே
உமக்கும் சக்தி மைந்தனிவன் சாற்றினேன் தமிழ்வணக்கம்!

சினிமா கொத்த சிற்பி வேண்டாமென
சிதையாத கவி சிற்பம் மட்டுமே செதுக்கும்
பாவின் மன்னன்
பால்வீதி படைத்த அண்ணல் !
இலங்கைக்குக் கவிப்பாலம் கட்டும்
கவிதைகளின் மன்னன்
பாரெங்கும் ஒரே கவிக்கோ
இன்று எம் கவியரங்கின் கோ
அண்ணல் அப்துல் ரஹ்மானைப் பணிந்தேன்.

அன்றொரு நாள்!
இன்றைப் போல் அவலங்கள் சூழாத –
அடுத்த பொழுது என்னாகுமோ ஏதாகுமோ என
நெஞ்சு எண்ணிப் பதைக்காத
எவனெவன் இங்கு வந்து
என்னென்ன சொல்வானோ
ஏதேது செய்வானோ என
இன்னலுறாத நாள்

அயோத்தி மாநகர்!
அமைதியின் பிறப்பிடம்!
அருளின் சிறப்பிடம்!
ஆண்மை,அன்பின் தரிப்பிடம்!
தலைமகன் இவனே!
தலைவன் இவனே!
தகைமை இவனுக்கே என
ஒருவரிருவரின்றி ஒட்டு மொத்தப்பேரும்
ஒன்றாக ஏற்றவன் இராமன்!

முடிதரித்து அயோத்தி ராமனாக ஆகும்வேளை,
அந்தணப்பெருந்தகை வசிஷ்டர்
அவன் காதில் ஒதியது
போரொடுங்கும் புகழொடுங்காது!

பலியெடுக்கும் போரை நிறுத்திப்
பகைக்கருள் ராமா,
உன் புகழ் நிலைக்கும்!

அன்றைய வாக்கு அந்தணர் வாக்கு-அறவாக்கு
இன்றைய நாளில் அதே வாக்கு
போரெங்கும் புகழொடுங்காது!

அப்படியே போட்டுப் பார்ப்போம்
அந்தோ பரிதாபம்!
அழகான பாதத்திலே
அளவு பெரிதான
அழுக்கான சப்பாத்தாக
அந்த வார்த்தைகள்!

ஜனகன் மகளை ஜானகியை சிறையெடுத்தோனை
சிதைத்தவன் ராமன்!
அதர்ம வழி சென்றவன்
தர்மத்தினால் வதையுண்டனன்
கதையறிவொம் நாம்.

பத்துத் தலை இருந்தென்ன
பலமான சேனையிருந்தென்ன
பல்லாண்டு தவமிருந்து பெற்ற வரமிருந்தென்ன
பலமான சோதரர்,புதல்வர் இருந்தென்ன!
செல்லும் வழி தவறாயின்
சீர் சிறப்பு எல்லாம் சிதறும்
ராமன் சொன்ன பாடம்!
ராவணன் கற்ற பாடம்! - காலம் கடந்து

அது ராமராவண யுத்தம்!
போர் ஒங்கியதங்கு!
ராமனின் புகழோக்கியதன்று!
அறவழிப்போர் அது!
அதர்மத்தை அழித்த போர் அது!

அன்றந்தப் போர் அடங்கியிருந்தால்,
ஒடுங்கியிருந்தால்
வீரனா ராமன்?
ராமனா வீரன்?
ராமன் வீரனா?
பற்பல தலைப்புகளில்
பலப்பல பட்டிமன்றங்கள்
பரவலாக நடந்திருக்கும்

ராவணவதை நீதியானது;
நிகழ்ந்திருக்க வேண்டியது
ஒத்துக்கொள்வீரோ?
உண்மையை ஏற்பீரோ?

அன்றந்த இராவணன் வதையது
வரலாறானது!

இன்றிங்கு நவீன ராவணரை
ராமர்கள் வதைப்பதை நீவிர் தடுப்பதேனோ?
வாளினாலும் வேலினாலும்
அன்றெம்மவர் வாழ்ந்து காட்டியதை-எமக்கு வாழ்க்கை காட்டியதை
இன்று வாயினால் காட்டுமாறு கேட்டு நிற்றல்
பொருந்துமா? காலப் பொருத்தமா?

நவீன காலம் இது
தட்டினால் தான் எதுவும் நடக்கும்!
தட்டச்சு தட்டு! தாளில் எழுத்து!
கதவு தட்டு! தாள் திறக்கும்!
கணினி தட்டு! வலையில் உலகம்!
முதுகில் தட்டு! முன்னேற்றம் காண்பாய்!
முன்னிற்பவனைத் தட்டு! முன்னணியில் நீயே!
எதிர்ப்பைத் தட்டு! ஏற்றமுண்டு!

போர் ஒடுங்கும் புகழ் ஒடுங்காது
அன்றைய வார்த்தைகளில்
கொஞ்சம் புதிய குருதி சேர்த்துப்
புதிய சொற்கள் செய்வோம்
உயிரற்றுப் போன உளுத்துப் போன
பழையவற்றுக்குப் புதிய உயர் கொடுப்போம்.
ஆண்டபரம்பரை அன்று மறந்தவற்றை
வேண்டாம் இவையினியென்று
வெறுத்தொதுக்கியவற்றை
மீண்டும் தூசு தட்டி மெருகேற்றுவோம்
இன்றைக்கேற்றபடி இப்பொழுதுகேற்றபடி..

போரொடுக்கும் புகழொடுங்காது
அன்று பொருந்தியது!
அழிவு தந்த அனர்த்தம் நின்று
அமைதி வந்தால்
அன்று மகிழ்ச்சி
இன்றும் தான்!

மண்ணாசை மனதில் கொண்டு
பிறநாட்டின் பொன் மீது மோகம் கொண்டு
பிறன் பெண் மீது மையல் கொண்டு
போர் நடத்தி பேரழிவு உண்டாக்கின்
போர் ஒடுங்கல் பேராண்மை!
பெருநன்மை!
அர்த்தமொன்று இருந்து
அடையாளங்கள்
மரபு அடையாளங்கள் காக்க
யுத்தங்கள் எனின்
போர் ஒடுங்கின் ஒடுங்குவது
போர் மட்டுமல்ல
போர்ப்பரணி பாடி ஊருலகம் முழுதும்
பறைதட்டிய நாம், நம் மண்,நம் மானம்,
நம் இருப்பு,நம் புகழும் தான்.

ஐந்தாண்டு திட்டங்கள் அமுல்படுத்தியவுடனேயே
அடங்குவதுபோல்
அவசரகாலச் சட்டங்கள்
ஆறேழு கைகளோடு அரங்கேறுதல் போல்
அன்றந்தத் தவமுனி
அண்ணல் ராமனுக்கு
அறவோதிய அருள்மாழி
போரொடுங்கும் புகழொங்காது!

பொருத்தமானதே அன்று!
மானமும் வீரமும் அறமும்
அன்று ஒங்கி நின்ற காலம்!
அரசர் செங்கோலாட்சி ஒச்சி நின்ற காலம்!

இன்று
வாழ்க்கையில் சந்தோஷங்களை விட
நாம் சந்திக்கும் தோஷங்களும்
கோஷங்களும் தான் அதிகம்
வாழ்க்கை அதிகமான கேள்விக் குறிகளைத்
தாங்கி நிற்பதால்
அதிகமாக எதிர்ப்பார்ப்பதென்னவோ
ஆச்சரியக் குறிகளைவிட முற்றுப்புள்ளிகளைத்தான்.
கேள்விக் குறிகளாக
வாழ்க்கையின் முதுகுகள் வளைந்து
எதிர்காலங்கள் கொமாவைப் போட்டுக் கொண்டிருப்பதால்
விரைவிலேயே இங்கொரு முற்றுப்புள்ளி
செந்நிற முற்றுப்புள்ளி வேண்டும்

புள்ளி வைக்க யார் வருவர்?
எப்போது வருவர்?
வரும்வரை இங்கிருப்பவை இங்கிருக்குமோ?
சிதைத்தவை - புதைந்தவை
மண்ணோடு மண்ணாகி மக்கி மறைந்தவை
எரித்தழிந்தவை உயிர்பெற்றெழுந்தால்
அவை தம் சாட்சியமும்
விசாரணைக் குழுக்களிடம் சென்று முறையிடும்!
எம் மண்ணில் புதைகுழிகட்டுப் பேச்சு வந்தால்
வசிட்டரிடமே கேட்கும்
"ஐயா இக்காலத்தில் தாங்கள் கூறியது பொருத்தமா?"என!

போர் ஒடுக்கி புகழ் பெருக்க
வாள்வேல் வில்லை ஒருபுறம் வைத்துவிட்டு
இன்றைய ராமன்
அளவளவாவி முடிவு காண
காடு விட்டு
நகர் வந்தானாயின்.....
நாம் சற்றுக்கற்பனையில் சிந்திப்போம்!

காட்டுமிராண்டி ஆட்சி செய்யும் கூட்டத்துக்கு
ராமனைக் காட்டிக் கொடுத்து
கூத்து நடத்தும் நவீன பரதர்களிருக்கும் போது
அரசவையில் அரைவாசி உரிமைகூட அதிகமென்றும்
அடி பிடி தான் உகந்ததென்றும் அடம்பிடிக்கும்
விக்ரம வில்லன்கள் விடாப்பிடியாய் நிற்கும்போது
நீயா நானா என்று முட்டிமோதும்
நீசர் இருக்கும்போது
கேசம் மழித்தும் துவேஷம் மழிக்காத
துறவிகள் பலர் இருக்கும்போது
சாவிகொடுத்து சாவாட்டம் பார்க்கும்
அயல் அரசர் இருக்கும்போது
எங்கிருந்து தீர்வு வரும்?

நம் ராமனுக்கு அவன் மணமகள்
எம் மண்மகள் எப்படிக் கிடைப்பாள்?

இந்தப்போர் ஒடுக்கியும் ஒடுக்க முடியாப்போர்!
ஒடுங்கினால் மடங்கிப் போகும்
எம் மானம்,மரபு!

போர் ஒடுங்கும் புகழ் ஒடுங்காது

சற்று மாற்றிப்பார்ப்போம்
போர் என்றோ பொசுங்கிப் போகலாம்
போர் புரிவோர் பொடிப் பொடியாகலாம்
விதையாய் வீழ்ந்து வெந்துமடியலாம்
போர் ஒடுங்கிப் பொய்யாய்ப் போகலாம்
ஆயின் உரிமைப் போரிதற்கு உதிர்ந்ததனால்
எமது புகழ் ஒடுங்காது!
ஒங்குமிங்கு!

போரினின்று ஒதுங்காமல்
போரிதனை ஒடுக்காமல்
பதுங்கினாலும் பின் பாய்ந்து
இலக்குகளை எட்டுவதே
இன்றைய எம் முடிவு!
இதனாலேயே கிட்டக்கூடும் நாளைய விடிவு!

நம் நவீன ராமனுக்கு
வசிட்டர் இன்றிருந்தால்
சொல்லியிருப்பார் அதனையே

இனியெல்லாம் அவன் கையில்!
போர் ஒடுங்கும்! புகழ் ஒடுங்காது!

காலங்கடந்தும் கம்பவரி
மீண்டும் மீளவும் தந்து நிற்கும் மிடுக்கு இது!

காலம் மாறினாலும்
கவிக் கோலம் மாறி நின்று
கூறி நிற்கும் பொருளை மீட்டிப் பார்த்தேன்

வழுவிருப்பின் பொறுப்பீர்!
மனதினுள்ளே மறுப்பீர்!
((((
இதை யார் எழுதினாரோ அவர் நன்றாகவே எழுதினார்
இது யாரல் சுடப்பட்டதோ அவரும் நன்றாகவே சுட்டார்
வழமைபோல் உங்களுக்காக நாமும் சுட்டோம்)))
உலகில் மௌனம் தான் மிகப் பெரிய ஆயுதம்